தர்மபுரி மாவட்டம் அரூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர் . 
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன.  அதன்படி இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் தேசியக் கொடியை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
அப்போது குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரானது எனவும் தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது எனவும்.  CAA, NRC, NPR  சட்டத்தை ஆதரித்து பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். மேற்கு வங்கம் பஞ்சாப் பீகார் தெலுங்கானா பாண்டிச்சேரி கேரளா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அம்மாநில மக்களின் உரிமை மாநில அரசாங்கம் பாதுகாப்பது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தை, நாம் தமிழர் கட்சி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர்.


Popular posts
கொரோனா வைரஸ் - அமெரிக்க உதவியை நிராகரித்த ஈரான் - கரணம் என்ன
Image
ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
கொரோனா பாதிப்பு 3லட்சத்து 75 ஆயிரம் - பலியானோர் எண்ணிக்கை 14654 ஆக அதிகரிப்பு
Image
செங்கம் காவல் துணை கண்கானிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு கிளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது
Image
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கு சீல்
Image